பொம்மை முதலமைச்சருக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

விடியா திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தைப்போல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உளவுத்துறை கடந்த 28 மாத விடியா திமுக ஆட்சியில், முற்றிலும்
செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

முன்விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, பழிக்குப் பழி தாக்குதலில் ஈடுபடும் ரவுடிகளின் அராஜகங்கள் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகனும், விளையாட்டுத்
துறை மந்திரியுமான உதயநிதியும், மக்களிடம் ஏதேதோ பேசி, அவர்களைக் குழப்பி திசை திருப்பி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலங்களில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், வரும் முன் நடவடிக்கை எடுப்பதிலும் சுதந்திரமாக காவல் துறை செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 28 மாத காலத்தில், தனது சுய முகவரியை இழந்து, ஆளும் கட்சியின் கைப் பாவையாக மாறி, தமிழகத்தில் தற்போது நிகழும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு நிகழ்வுகளை முன்னதாகவே அறிந்தும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், வேடிக்கை பார்த்து வரும் நிலை மிகவும் வெட்கக்கேடானது என கடுமையாக சாடியுள்ளார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியில், அண்டை நாடான இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ உள்ளதை முன்னதாகவே கண்டறிந்து, மத்திய அரசு மூலம் இலங்கைக்கு தமிழக நுண்ணறிவுப் பிரிவு அறிவுரை வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால் விடியா ஆட்சியில் கோவை கார் குண்டு வெடிப்பு; கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம்; சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளச் சாராய சாவு என்று, விடியா திமுக அரசின் காவல் துறை சறுக்கிய நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடியா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அடிபணிவதால், தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூக விரோதிகளின் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து, உண்மைத் தகவல்கள் அரசுக்கு வருவதில்லை என்ற செய்திகள் தெரிய வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விடியா திமுக அரசின் காவல் துறை, சட்டம்-ஒழுங்கை பேணுவதை விட்டுவிட்டு, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரிப்பது எப்படி என்பதிலும், விடியா திமுக அரசை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் புனைவதிலும் மட்டுமே ஈடுபட்டு வருவது மிகுந்த வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை வெறிக் கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளதாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதே போல், சென்னை பட்டினப்பாக்கத்தில் பட்டப் பகலில் ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் மாநிலம் முழுவதும் சமூக விரோதிகளின் கொட்டம் அதிகரித்துள்ளதால் காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க, மதுரை கிழை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழக்காமலும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமலும் கைகட்டு வேடிக்கை பார்த்ததாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

இதே போன்ற நிலைமைதான் சென்னை பனையூர் பகுதியில் நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது விடியா திமுக அரசின் காவல் துறையினுடைய தோல்வியைக் காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலங்களில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது போல், இனியாவது தமிழகக் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்து தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதலமைச்சரை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version