இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! வெறும் ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை – ஏமாற்றிய ஸ்டாலின் அரசு!

உங்ககிட்ட ஒரு ஆயிரம் ரூபாய் காச வாங்கறதுக்குள்ள நாங்க பட்ற பாடு இருக்கே ஐயோயையையையோ… என்று சந்தானம் காமெடி போல, புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள்…

ஆட்சிவந்தவுடன் எப்பங்க அந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பீங்க என்று கேட்டால், நாங்க என்ன தேதியா சொன்னோம் என்று எகிறினார் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர்.. இன்னும் கொஞ்சநாள் போய் கேட்டதும், நானா தேர்தல் அறிக்கை தயார் செஞ்சேன், என்று சொல்லி தப்பித்துக்கொண்டார் அதே பிடிஆர்.. இப்படியே ஒவ்வொரு நாளும் ஓட, ஒரு கட்டத்தில் நாங்கள் தகுதிவாய்ந்த மகளிர்க்குத்தான் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்போம் என்று சொல்லி, அதில் பல நூறு கண்டிஷன் போட்டு பெண்களை காண்டாக்கியது விடியா அரசு…. ஓ அப்போ எங்களுக்கு தகுதியை நீங்க தான் வரையறை செய்வீங்களா? என்றெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு கொந்தளித்தனர் மகளிர்.. ஆனால் அதையெல்லாம் சட்டையே செய்யவில்லை ஸ்டாலின்..

தமிழகத்தில் 3 கோடியே 2 லட்சம் ஆண் வாக்காளர்களும்,, 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும் என, ஆண்களை விட பெண் வாக்களார்களின் எண்ணிக்கை தான் அதிகம்.. இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான் நாங்க உரிமைத்தொகை தருவோம் என்று பீகாரின் பிதாமகன் பிரஷாந்த் கிஷோர் வகுத்துக்கொடுத்த திட்டத்தை உளறிக்கொட்டி வாக்கு கேட்டு ஜெயித்துவிட்டு, இன்று வசமாய் சிக்கிக்கொண்டது திமுக அரசு… இதிலும் இன்று வெறும் 1 கோடி பேருக்கு மட்டும்தான் உரிமைத்தொகை வழங்கப்போகிறோம் என்று குண்டடைத்தூக்கிப்போட்டதும், ஒட்டுமொத்த மகளிரும் திமுகவை கரித்துக்கொட்டத் தொடங்கிவிட்டனர். இதில் ஹைலைட்டே என்ன வென்றால், தகுதி இல்லாததால்தான் பெண்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்றுவேறு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்…அடேயப்பா… பெரியாரின் பேரன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கான தகுதியாக எதையெல்லாம் வைத்திருக்கிறார்? 3 கோடி பெண்வாக்காளர்களிடம் கெஞ்சிக்கெஞ்சி வாக்குக்கேட்டுவிட்டு, இன்று அதில் பாதி பெண்களுக்குகூட உரிமைத்தொகை கொடுக்காமல், 3ல் 1 பங்கு பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை கொடுப்பதெல்லாம் என்னமாதிரியான தில்லாலங்கடி வேலை? என்று எல்லோர் வீட்டுத் திண்ணையிலும், அடுப்படிகளிலும் இன்று இதே பேச்சுத்தான்..

ஆக, பெண்களை ஏமாற்றி வாக்கு கேட்டுவிட்டு, இன்று எந்த முகத்தைவைத்துக்கொண்டு பெண்களின் பாதுகாவலன் திமுக என்று மார்தட்டுகிறார் ஸ்டாலின்? 3 கோடி பெண்களில் வெறும் 1 கோடி பேர்தான் “தகுதியான குடும்பத் தலைவிகளா”? மீதமிருக்கும் 2 கோடி பெண் வாக்காளர்களையும் ஏமாற்றிவிட்டு எந்த தார்மீக அடிப்படையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?ஏற்கனவே விலைவாசி உயர்வு, ஓசி டிக்கட் விவகாரம், பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை என்று ஒட்டுமொத்த பெண்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் ஸ்டாலின், இந்த உரிமைத்தொகை விவகாரத்திலும் தோற்றுவிட்டரா? ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாட்டு பெண்களை ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகிறது.

Exit mobile version