பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் இந்த விவாகரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, முரசொலி அலுவலகம் தொடர்பாக விளக்கம் கேட்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஏழு நாட்களில் பதிலளிக்குமாறு தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், முரசொலி அலுவலகம் தொடர்பாக தற்போது முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, விளக்கமளிக்க நவம்பர் 19ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version