பதவி ஆசை பிடித்து அலைகின்ற திமுகவினர்- அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

திமுகவினர் பதவி ஆசை பிடித்து அலைவதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று எதிர்கட்சிகள் ஏளனம் செய்த போது பிரதமரை அழைத்து வந்து அடிக்கல் நட்ட வைத்த பெருமை முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையுமே சாரும் என்று கூறினார். சட்டமன்றத்திற்கு வரும் ஸ்டாலின் பொய்யை தவிர வேறு எதையும் பேசமாட்டேன் என சத்தியம் செய்து வருவதாக அமைச்சர் விமர்சித்துள்ளார். திமுகவினர் பதவி ஆசை பிடித்து அலைவதாகவும், சட்டமன்றத்தில் பேசும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலில் உண்மையை அறிந்து பேச வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 

Exit mobile version