19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, வங்கதேசத்திற்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
16 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டியில், தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சக்சேனா 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து ஓரளவு தாக்குபிடித்த திலக் வர்மா 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 88 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்கதேச பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து. இதனால் இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி கடைசி 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.