முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவதாக நடந்து முடிந்த டி20 தொடரை இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தோரில் இன்று துவங்குகிறது.

சமீப காலமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வாலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இந்த டெஸ்ட் தொடரிலும் இந்த கூட்டணி ரன்களை குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கேப்டன் விராட் கோலி, புஜரா, ரகானே ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் இந்த போட்டி வருவதால், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு புள்ளி மதிப்பை அதிகரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version