அமெரிக்காவின் ஆயுத விற்பனை ரூ. 14 லட்சம் கோடி அதிகரிப்பு – வெளியறவுத்துறை அறிவிப்பு

 

அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி இந்த ஆண்டில் 14 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், ஈரானுக்கு எதிரான வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆயுத ஏற்றுமதி இந்த ஆண்டு 13 சதவிகிதம் அதாவது 14 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுத விற்பனை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிபர் டிரம்பின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளே இதற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version