'NGK படத்தின் டீசர் வெறித்தனமா இருக்கு'… கார்த்தி குஷி…

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ படத்தின் டீசர், நாளை காதலர் தினத்தில் வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் ‘தேவ்’ படம் வெளியாகும் திரையரங்கில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பி படத்தில் அண்ணன் நடித்த படத்தின் டீசர் வெளியாவதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ‘NGK’ படத்திற்கு தற்போது ‘U’ Certificate கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். 

இந்நிலையில் ‘NGK படத்தின் டீசர் வெறித்தனமா இருக்கு’ என கார்த்தி எனக் கூறியுள்ளார். படத்தின் டீசர் தான் பார்த்துவிட்டதாக கூறிய கார்த்தி, முழு படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார்.

Exit mobile version