திமுக பொருத்துக என்று கேள்வி கேட்டால் சிறு குழந்தைகூட ஊழல் என்று சரியாக பொருத்தும். அந்த அளவிற்கு ஊழலில் முங்கி முத்தெடுக்கும் திறமை திமுகவிற்கே உரித்தான ஒன்று. சரி இப்போது என்ன புதிய ஊழல் என்று பார்த்தால், போக்குவரத்துத் துறையில் டயர் வாங்கி மறுசுழற்சி செய்வதில் ஊழல் அம்பலப்பட்டு இருக்கிறது. ஏழை பாமரப் பயணிகள், தங்கள் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்ளும் மாதிரி இந்த விடியா ஊழல் அரசு செய்துவிட்டதே என்று தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களே நொம்பலப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனைத் தொடர்ந்து ஊழலில் ஊன்றி ஆழம் பார்த்து வரும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளமால் இருப்பதன் பின்னணி என்ன? ஒருவேளை அடிக்கும் கமிஷன்களை சரியாக குடும்பத்திற்கு தந்துதவும் அமைச்சர்கள் பட்டியலில் சிவசங்கர் இருப்பதால் விட்டு வைத்திருக்கிறாரோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் இரண்டு டயர்கள் வெடித்துச் சிதறியதில் ஒரு மேய்ப்பரும் 100 ஆடுகளும் இறந்தன. போக்குவரத்துக் கழகங்களில் நடத்தப்படும் விசாரணையில், மோசமான டயர்களே விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் என்று அன்றே எச்சரித்தும், இன்று வரை டயர்களை மாற்றாமல் தொடர்ந்து பழைய டயர்களையும் பழுதடைந்த டயர்களையுமே பயன்படுத்துகிறது விடியா திமுகவின் போக்குவரத்துத் துறை. அதே போல விலங்குகள் மனிதர்கள் திடீரென குறுக்கே செல்லும் போது, வாகன ஓட்டிகள் திடீரென வாகனத்தை நிறுத்த முடியாமல் தவிப்பதால் விபத்துகள் எளிதில் ஏற்படுகிறது.
ஆனால் இதற்கெல்லாம் விதையை அன்றே இட்டவர், இன்றைக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி. ஆம், 1996ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி உருட்டி ஒரு தனியார் ரப்பர் கம்பெனியை கோயமுத்தூரில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் ஏகபோக வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்ப, நீண்ட காலமாக முடக்கத்தில் இருந்தது. கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் அடங்கி இருந்த இந்த நிறுவனம், திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க துவங்கியது. போக்குவரத்துத் துறையில் எந்த டெண்டரையும் அந்த நிறுவனத்துக்கே சரண்டர் செய்தது திமுக. விளைவு தரமில்லாத டயர்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து போக்குவரத்துத் துறைக்கு அளித்தது. இதுவெல்லாம் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே தெரிந்தாலும், தன் குடும்பத்திற்கு முறையா கமிஷன் வருகிறது. நன்றாக கல்லாக் கட்ட முடிகிறது என்று அமைதி காத்துக்கொண்டார். இப்போது வரை அமைதி காத்துக்கொண்டு மட்டுமே இருக்கிறார்.
திமுக குடும்பத்திடம் பெயர் கெட்டுவிட்டதால் ராஜ கண்ணப்பனை தூக்கிவிட்டு சிவசங்கருக்கு வாய்ப்பளித்தார் ஸ்டாலின். சிவனேனு இருந்த சிவசங்கருக்கு அடித்தது ஜாக்பாட். ராஜகண்ணப்பன் வழியில் தானும் பேராசைக் கொண்டு டயர் ஊழலை சத்தமில்லாமல் இப்போது வரை செய்து கொண்டிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான்.. எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும். அப்படி ஊழலைத் திளைத்து இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், இன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் முடிவு காலம் வருமா? அந்த முடிவே தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்குமா?
Discussion about this post