சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற மேலும் இரண்டு பெண்களை போலீசார் நிலக்கல் அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெண்கள் பலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, பெண்களால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் கனக துர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இன்று மேலும் இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர்.
இதனையறிந்த ஐயப்ப பக்தர்கள் பம்மையில் கூடி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நிலக்கல் வந்த பெண்களை பாதியிலேயே கேரள போலீசார் திருப்பி அனுப்பினர்.