இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

விருத்தாசலம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், 20 கிலோ மீட்டர் வரை வாலிபரின் உடலை கார் இழுத்து சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருத்தாசலம் அருகே கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மோஷன் என்ற வாலிபர் அந்த காரின் அடிப்பகுதியில் சிக்கி சாலையில் தேய்த்தவாறு இழுத்து செல்லப்பட்டுள்ளார். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்று காரை நிறுத்தியபோது அடியில் ஒருவரின் உடல் சிதறிய நிலையில் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version