திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் இரு வகையான லாபம் பார்க்கும் வகையில் இரட்டை அடுக்கு சாகுபடி முறையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் இல்லாத நிலையில் கிணற்றுப்பாசனம் மூலம் வாழை, கரும்பு, தென்னை, காய்கறி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஒரே நேரத்தில் இரு லாபம் பார்க்கும் வகையில் இரட்டை அடுக்கு சாகுபடி முறையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் . அகத்திக்கீரையின் நடுவே கனகாம்பரம் பூ பயிரிட்டு இரட்டை அடுக்கு சாகுபடி முறை மேற்கொள்ளப்படுகிறது. கனகாம்பரமும் நல்ல லாபம் தருவதால் இந்த சாகுபடி முறையில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்