600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்

இந்த ஆண்டு 600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டபோது முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

விதி எண் 110-ன் கீழ் வெளியான புதிய அறிவிப்புகள்

1.காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேண்மைமிகு மையம் ஒன்று ரூ.120 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

2.அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் 296 துணை சுகாதார மையங்களுக்கு ரூ.79.93 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

3.ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.67.76 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.

4.ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.

என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

Exit mobile version