காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக்கில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுவதால், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே, அனந்த்நாக்கின் பிஜிபோராவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிழந்த ராணுவ மேஜர் கேதான் ஷர்மாவிற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

கடந்த 2012-ல் டேராடூனின் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த கேதான் ஷர்மா, புனேயில் இருந்து காஷ்மீருக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. மிகவும் துடிப்பானவர் என சக வீரர்களால் இவர் பாராட்டப்படுகிறார்.

Exit mobile version