பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் கோயிலை புதுப்பிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட சண்டையை, காவல்துறையினர் சுமூகமாக பேசி தீர்த்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலையத்தில் பின்புறம் அமைந்துள்ள பழமையான அய்யனார் கோயில் தானே புயலால் சேதம் அடைந்தது. இந்நிலையில் கோயிலை புதுப்பிக்க அய்யன் குட்டி என்னும் வகையறா குழுவினர் அடிக்கல் நாட்டினர். இதற்கு எதிர்ப்புதெரிவித்து மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு உரிமை கொண்டாடியதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் கருத்துமோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். பின்பு இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.