இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக மனிதர்களின் 6 -வது விரலாக மாறிய ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாகி வருகிறது. அதற்கேற்ப சந்தைகளில் புதிய வசதியுடைய ஸ்மார்ட் போன்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகம் செய்கிறது.
அந்த வரிசையில் castAway எனும் நிறுவனம் இரண்டு திரைகளை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனை தனித்தனியாக பிரித்து பயன்படுத்தலாம், மற்றும் இரு திரைகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு அப்பிளிக்கேஷன்னையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மாட் போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் இரண்டு திரைகள் இருப்பதனால் பயன்பாட்டாளர்கள் வழக்கமாக போன்களில் வைத்திருக்கும் ஆப்களை விட அதிகமாக வைத்துக்கொள்ளலாம்.
இது மட்டுமில்லாமல் ஒரு மொபைலின் தரவுகளை ஒரு திரையில் இருந்து மற்றொரு திரைக்கு எளிதில் மாற்ற கூடிய வசதியும் உள்ளது.. விரைவில் இந்த ஸ்மாட்போன் செல்போன் பிரியர்களின் கவனத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.