அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் மூண்டது. இது தொடர்பாக கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி 20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இதனையடுத்து, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு சென்று வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் சீனாவின் பிரதிநிதிகளும் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில், நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்ததையடுத்து, இருநாட்டு தலைவர்களும் வியட் நாமில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.