கன்னியாகுமரியில் இரண்டரை கிலோ கஞ்சாவை வைத்திருந்த இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம்,  வடசேரி, அண்ணா விளையாட்டு அரங்கம் முன் சந்தேகப்படும் படியாக சுற்றித் திருந்த 2 நபர்களை வடசேரி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பெயர் குமரேசன் மற்றும் நாகராஜன் என்பதும், அவர்களிடம் இரண்டரை கிலோ கஞ்சா இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். மாணவர்களுக்கு கஞ்சாவை விற்க அவர்கள் முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Exit mobile version