காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் பலி

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்கம் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினரும், மாநில போலீசாரும் பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றனர்.

இவர்கள் ஜீனத் உல் இஸ்லாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Exit mobile version