திண்டுகல் மாவட்டம் பெரும்பாறை மற்றும் தாண்டக்குடி பகுதிகளில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை உரிய அனுமதி இல்லாமல் எடுத்து சென்ற இரண்டு லாரிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல், பெரும்பாறை, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள பெருமளவு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்களை எடுத்துக் கொள்ள நில உரிமையாளர்களுக்கு வருவாய்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் கீழே விழுந்த மரங்கள் மட்டுமல்லாது நல்ல நிலையில் உள்ள மரங்களையும் அனுமதி இல்லாமல் வெட்டி லாரிகளில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த லாரிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி மரங்களை பறிமுதல் செய்தனர்.