திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் கார் தனியார் பேருந்து மீது மோதியதில், காரில் பயணம் செய்த பால கிருஷ்ணன், கஜேந்திரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பாக, பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதியதில்,அதில் பயணம் செய்த 9 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.