புதுச்சேரி அருகே, இரு மீனவ கிராமங்களுக்கிடையே கலவரம் வெடித்துள்ளதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவ கிராம மீனவர்களுக்கிடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில், கடற்கரையில் திரண்ட இரு தரப்பினர், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கலவரக்காரர்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.