இரண்டு கால் செயலிழந்தும் கார் ஓட்டி பெண் சாதனை

ஊனம் என்பது உடலளவில் மட்டுமே மனதளவில் இல்லை என்பதை புதுச்சேரியை சேர்ந்த அனிதா என்பவர் நிரூபித்துள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த அனிதா என்பவர் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு தனது இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் 12ஆம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். படிப்பில் மட்டுமல்லாமல் தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். தனது இரண்டு கால்களும் செயல் இழந்தபோதும் சிறிதும் மனம் தளராது விடா முயற்சியுடன் கைகளை பயன்படுத்தி காரை இயக்கி வருகிறார். இதில் அதிசயமாக கைகளால் காரை இயக்கி அதற்கான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுள்ளார். தற்போது அவர் புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் துணை கோட்ட பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

Exit mobile version