லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான இருவருக்கு அக்.18 வரை நீதிமன்ற காவல்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன் மற்றும் சுரேஷ் என்பவரின் தாயார் கனகவல்லி ஆகியோருக்கு அக்டோபர் 18 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற கொள்ளையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து, காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினர் வாகனச் சோதனையில், மணிகண்டன் என்ற கொள்ளையன் பிடிப்பட்டார். மணிகண்டனுடன் வந்த சுரேஷ் என்ற கொள்ளையன் தப்பினார். இதையடுத்து, மணிகண்டன், மற்றும் சுரேஷின் தாயார் கனகவல்லி இருவரையும், திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, இருவரையும் 2 வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிறிவேணி உத்தரவிட்டார்.

Exit mobile version