ட்விட்டரில் ட்ரெண்டாகும் “என்றும் தல தோணி”

இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்தார். அவர் களத்தில் இருந்தாலும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் புது ஜெர்ஸி சர்ச்சைக்குள்ளாகியது. இணையத்தில் அதனை சித்தரித்து மீம்ஸ்கள் குவிந்தன. ஆனால் அதைவிட தோனி அதிரடியாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என்ற கருத்து அதிகமாக எழுந்தது.

ஆனால் இதற்கு ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தோனிக்கு ஆதரவளிக்கும் வகையில் ட்விட்டரில் சென்னை அளவில் “என்றும் தல தோணி” என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்தே நன்றாக ஆடாமல் கடைசியில் விளையாடிய தோனியை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Exit mobile version