திமுகவின் அராஜக மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக,
- நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு திமுக இழைத்த அநீதிக்கு கண்டனம்
- மேகதாது அணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
- தொடர் மின்வெட்டுக்கு காரணம் அணில் என்று கதைசொல்லும் திமுகவுக்குக் கண்டனம்
- பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி கொடுத்த நிலையில் இன்னும் வாய் திறக்காதது ஏன்?
- தொடர்ந்து மக்களை வஞ்சித்து வரும் திமுகவின் போக்குக்கு கண்டனம் , ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இதே கேள்வியை மக்களும் தற்போது கேட்கத் தொடங்கியுள்ளதை சமூக வலைதளப் பரவல்கள் உறுதி செய்கின்றன. ட்விட்டரில் தேசிய அளவிலான அரசியல் ட்ரெண்டிங்கில் “திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா” என்ற தனியடைவு (hashtag) வைரலாகி வருகிறது.
Discussion about this post