டுவிட்டருக்கு சொந்தம் கொண்டாடும் தல- தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் தல என அனைவராலும் கொண்டாடப்படுவர் நடிகர் அஜித். அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்ப்பார்கள். கடந்த 1993ம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். அதற்கு முன்னாடி ஒரு திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். ஆனால் அமராவதி படமே அவரின் முதல் படத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதனை கொண்டாடும் விதமாக இன்று காலை முதல் #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களமான ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக விஜய் ரசிகர்கள் #மண்ணின்மைந்தன்விஜய் என்ற ஹேஷ்டேக்கை சென்னை அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரக்காலமாக டுவிட்டரில்
ஹேஷ்டேக் மூலம் மோதலில் ஈடுபட்டு வருவதை ஒரு ட்ரெண்டாகவே வைத்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version