இந்தியர்களின் நாட்டுப்பற்றை எண்ணி வியக்கும் ட்விட்டர்

குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பல்வேறு குடியரசுதின ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோனும், பிரதமர், துணை குடியரசுத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

மற்ற மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றினார்கள். நிகழ்ச்சியில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் #குடியரசுதினம்,  #RepublicDay2020, #Constitution_Of_SupremeGod, #RepublicDayIndia, #JaiHind, #71stRepublicDay, #ProudlyIndian, குடியரசுதினம்  தொடர்பான பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.  

இந்தியர்களின் நாட்டுப்பற்றை எண்ணி உலகம் மட்டுமல்ல ட்விட்டர் நிறுவனமும் வியந்துள்ளது.

Exit mobile version