உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தமிழ் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு சென்னை தரமணியில் உள்ள உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில், அழிந்து கொண்டிருக்கும் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க 34 லட்சத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தினார். இந்த ஓலைச்சுவடிகளை நூலாக்கம் செய்ய சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
பட்டயப்படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தேர்வு அடிப்படையில் ஓராண்டுக்கு பத்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பில் சேருவதற்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை உலக தமிழ்.ஓஆர்ஜி (ulakathamizh.org)என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 10-ம் தேதி ஆகும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.