தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், ஒரு சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்திருந்தது. அறிக்கையை பரிசீலனை செய்த ஆணையம், அதன் நகலை தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கி, பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு, நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்ற மூவர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என்றும் இந்த பிரச்சினையில் குழு தலையீடு செய்ய அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையினால் சுமார் 5 லட்சம் டன் அளவிற்கு காப்பர் கழிவுகள் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனை உரிய பாதுகாப்போடு அகற்ற ஆணையம் உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூவர் குழு அறிக்கையை ரத்து செய்து, ஆலையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, வேதாந்தா நிறுவனமும் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, தீர்ப்பாயம் புதிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Exit mobile version