தூத்துக்குடி அனல் மின் நிலைய பழுது சீர் செய்யப்பட்டது

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி துவக்கியது. தற்போது 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளன. தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது மற்றும் 5வது யூனிட்டுகளில் நேற்று காலை திடீரென பழுது ஏற்பட்டது.

இதையடுத்து அந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், 1வது, 3வது மற்றும் 4வது யூனிட்களில் மின் உற்பத்தி வழக்கமாக இருந்தநிலையில், 2 மற்றும் 5வது யூனிட்டில் இன்று பழுது சீர் செய்யப்பட்டது.

இதனால் இவ்விரு யூனிட்களிலும் மின் உற்பத்தி துவக்கியது. தற்போது 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version