கொற்கை அகழாய்வில் திரவப் பொருட்கள் வடிகட்டும் 9 அடுக்குகள் கொண்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 52 ஆண்டுகளுக்குப் பின் கொற்கை பகுதியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
17 குழிகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து ஆய்வாளர்கள் தொல்பொருட்கள் பலவற்றை கண்டெடுத்துள்ளனர். அதில், இன்றைய அகழாய்வில், திரவப் பொருட்களை வடிகட்டும் 9 அடுக்குகள் கொண்ட குழாய் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே, 3 சங்குகள், குறியீடுகளைக் கொண்ட ஒரு முழு பானை ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அந்த இடத்தில் சங்கு அறுக்கும் தொழில்கூடம் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post