தூத்துக்குடியில் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனை

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை அடுத்து தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் இரவுபகலாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைதொடர்ந்து பறக்கும் படையினர் இரவுபகலாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் பணம் எடுத்து செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக தூத்துக்குடியில் பறக்கும் படையினர் உள்ளிட்ட 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கிற்கு பணம் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியின் மடத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து தூத்துக்குடிக்குள் வரும் கார்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Exit mobile version