வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், கடுமையான காற்று மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால், தூத்துக்குடியில் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் மற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிவிப்பின்படி, கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் சந்திரா அறிவுப்பு வெளியிட்டுள்ளார்.