துருக்கி பத்திரிகையாளர் கொலை வழக்கில் சவுதி மன்னருக்கு தொடர்புள்ளதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சவுதி துணை தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சவுதி மன்னருக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் சவுதி அரசு அதனை மறுத்தது. இந்நிலையில் இந்த கொலை குறித்து விசாரிக்க ஐ.நா சபையின் சிறப்பி அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட் துருக்கி சென்று விசாரணை நடத்தி தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில் சவுதி மன்னர்கள் திட்டமிட்டு ஜமால் கசோக்கியை மிருகத்தனமாக கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக 11 கைது செய்து நேர்மையற்ற விசாரணையை சவுதி அரசு நடத்தி வருவதாகவும், சரியான ஆதரங்களை பெறுவதற்காக சவுதி அரேபியாவிற்கு செல்ல அதிகாரப்பூர்வ அனுமதி கோரியும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த இறுதி அறிக்கை விரைவில் ஐ.நா மனைத உரிமை கவுன்சிலிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.