காஷ்மீர் பிரச்சனை குறித்து விமர்சித்த துருக்கி அதிபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் துருக்கி அரசு முறை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா., கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், காஷ்மீர் பிரச்சினையை நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் மோதல் மூலம் கிடையாது எனவும் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரமதர் மோடியின் துருக்கி அரசு முறை பயணத்தை ரத்து செய்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 27, 28 தேதிகளில் துருக்கியில் நடக்கவிருந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதாக இருந்தது. இந்தநிலையில், இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.