சிவகங்கையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ‘செவ்வாய் பொங்கல் விழா’

சிவகங்கை மாவட்டத்தில் வரன் பார்ப்பது முதல், உறவைப் புதுப்பிப்பது வரையிலான நிகழ்வுகள் இடம்பெறும் செவ்வாய் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  

சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டையில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் செவ்வாய் அன்று கண்ணுடைய நாயகியம்மன் கோவில் வாசலில் ‘செவ்வாய் பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் விழாவில், பல்வேறு மாநிலம் மற்றும் நாடுகளில் வசிக்கும் அப்பகுதியை பூர்வீகமாக கொண்ட நகரத்தார்கள் ஒன்றுகூடி உறவுவினர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், தங்களது பிள்ளைகளுக்கு வரன்பார்க்கும் நிகழ்வையும் செய்துவருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு திருமணம் முடித்தவர்கள் இந்த ஆண்டு தனியாக பானையிட்டு  பொங்கல் வைத்து கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர். தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version