நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தினகரன் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.
தினகரன் கட்சி அங்கீகரிக்கப்படாத நிலையில், குக்கர் சின்னம் வழங்கப்படாமல், பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சக்திவேலுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து, அவருக்கு பிரஷர் கக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் தினகரன் அணியினர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரமத்திவேலூர் பகுதியில், சக்திவேல் குக்கர் சின்னத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது தினகரன் அணியினரை கலக்கமடைய செய்துள்ளது.