ஜப்பானில் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பானில் வடக்கு மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 ஆக பதிவான நிலநடுக்கத்தினால், யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கரையை நோக்கி அலைகள் பெரிய அளவில் வரத் துவங்கியுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கடை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ள ஜப்பான் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளது.