ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஈரோடு அருகே வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருச்செங்கோட்டை சேர்ந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

ஈரோடு அடுத்த காஞ்சிகோயில் பகுதியில்  தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஆயுதத்துடன் நுழைந்த மர்மநபர் ஒருவர் ஏடிஎம் மையத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஏடிஎம் இயந்திரத்தில பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சியின் மூலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வங்கி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் மாங்குட்டைபாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version