மணல் திருட்டை தடுக்க சென்ற வட்டாட்சியரை கொலை செய்ய முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மணல் திருட்டை தடுக்க சென்ற வட்டாட்சியரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அருகேயுள்ள அரசூர் பகுதியில், மணல் கொள்ளை நடப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி மணல் கடத்தலை தடுக்க சென்றுள்ளார். அப்போது ,மணலை கடத்தி சென்று கொண்டிருந்த லாரியை வழிமறித்தபோது, வட்டாச்சியரின் ஜீப்பில் வேகமாக மோதிய லாரி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. வட்டாட்சியர் அமர்ந்திருந்த பக்கம் அவரை கொலை செய்யும் நோக்கத்தில் மோதியது தெரியவந்தது. இதனையடுத்து, வட்டாட்சியர், புகழேந்தி லாரி ஓட்டுநர் சரவணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version