ஓசூர் வட்டாரத்தில் சுற்றிவரும் 2 யானைகளை, கும்கி யானையின் உதவியுடன் காட்டுக்குள் விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவரும் 2 யானைகளை, காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், முதுமலை யானைகள் சரணாலயத்திலிருந்து மாரியப்பன் என்கிற கும்கி யானை, ஓசூர் வனக்கோட்டத்திற்கு வந்துள்ளது. மேலும் பரணி என்கிற மற்றொரு கும்கி யானை நாளை வர உள்ளது. இந்தக் கும்கி யானைகளின் உதவியுடன், காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஓசூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.