கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள கரூர் வைசியா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுனர் உடையில் வந்த 3 பேர் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போல் உள்ளே நுழைந்துள்ளனர். அதில் இரண்டு பேர் காவலுக்காக வெளியே நிற்க, அதில் ஒருவர் தனது கையில் உள்ள பையை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அலாரம் சத்தம் ஒலிக்க, அங்கிருந்து மூன்று பேரும் தப்பிவிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் வந்த அந்த நபர்களில் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்க முடியாமல் அங்கிருந்து தப்பினர். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி, அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், புகார் அளித்த 5 மணி நேரத்தில் கொள்ள முயற்ச்சியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.