70-வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை புறக்கணித்த டிரம்ப்

70-வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்துள்ளார்.

ஜனவரி 26-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. இது தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு வெள்ளை மாளிகை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவின் 70-வது குடியரசு தின விழாவில் டிரம்ப் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடனான ஏவுகணை ஒப்பந்தம் மற்றும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி போன்றவை டிரம்பின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா, குடியரசு தின விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version