டிரம்ப் இந்தியா வருகை : பயணம் குறித்த விவரங்கள்

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியா வர உள்ள நிலையில், அவரது பயண விவரங்களை குறித்த தகவல்கள்

அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் மனைவி மெலானியாவுடன் புறப்படும் அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை காலை 11.55 மணியளவில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார்.

அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்கிறார்.

இதனை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு, விமான நிலையத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம் டிரம்பும், மோடியும் காரில் பயணம் செய்கின்றனர். 

மைதானத்துக்கு செல்லும் வழியில் டிரம்பும், மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தை 15 நிமிடங்கள் பார்வையிடுகின்றனர்.

 பின்னர் பிற்பகல் 1.15 மணிக்கு மொடேரா மைதானத்தை திறந்து வைக்கும் டிரம்ப், அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மட்டும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில் டிரம்ப் ஆக்ராவுக்கு புறப்பட்டு செல்கிறார்

 

Exit mobile version