அமெரிக்காவை காப்பாற்ற அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் பதவி விலக வேண்டுமென மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டிரம்பும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக மத்திய கிழக்கு அமைதித் திட்டம் என்ற பெயரில் அமைதி திட்டம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டார.
ஆனால் இந்த திட்டம் இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதாக தெரிவித்த பாலஸ்தீனம் திட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மலேசிய பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கர்கள் அனைவரும் நல்லவர்கள் என தெரிவித்த மலேசிய பிரதமர், ட்ரம்ப் அப்படிப்பட்டவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மகாதீர் முகமதுவின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.