டிரம்பின் கெடுபிடியால் குறைந்துள்ளது எச்1பி விசா விநியோகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கெடுபிடிகளால், எச்1பி விசா விநியோகம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டினருக்காக அந்நாட்டு அரசினால் எச்1பி விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த விசா,வேலையை தொடர விரும்பினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு 6 ஆண்டுகள் வசிக்கும் நபர் கிரீன் கார்ட் பெறத் தகுதியுடையவராகிறார். இந்தநிலையில், அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக எச்1பி விசா பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு 10 சதவீதம் அளவிற்கு எச்1பி விசா வழங்கப்படுவது குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் எச்1பி விசா வேண்டி விண்ணப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

Exit mobile version