அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசுவதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் வியட்நாமுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உறுதி அளித்தார். இந்த நிலையில் 2 வது முறையாக இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர்.
அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நாளை மறுநாள் வியட்நாம் நகரில் உள்ள ஹானோய் நகரில் நடைபெறுகிறது. டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் புறப்பட்டு சென்றுள்ளார்.
பியாங்யாங் நகரில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ள கிம் ஜாங் , 4 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.