பாகுபலி பட காட்சிகளை மார்ஃபிங் செய்து வெளியான வீடியோ : அமெரிக்க அதிபர் ரீ-ட்வீட்

பாகுபலி படத்தில் வரும் காட்சிகளை சித்தரித்து அமெரிக்க அதிபர் டிரம்பை மையப்படுத்தி வெளியிடப்பட்ட வீடியோவை, அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்தடையும் டிரம்பை வரவேற்க, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஒற்றுமையை உறுதிப்படுத்தும் விதமாக, பாகுபலி படத்தில் வரும் காட்சிகளை சித்தரித்து, அதில் டிரம்ப் இடம்பெற்றிருப்பது போன்ற மார்ஃபிங் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த காட்சிகளை டிரம்ப் ரீ-ட்வீட் செய்துள்ளார். 

 

 

Exit mobile version