சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இங்கிலாந்து தூதரை விமர்சித்த ட்ரம்ப்

தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில், கருத்து தெரிவித்த இங்கிலாந்து தூதரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்ததை அடுத்து இரு நாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருக்கும் கிம் டர்ரோச் இங்கிலாந்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவரால் வெள்ளை மாளிகையில் குழப்பம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம், இது இங்கிலாந்து அரசின் கருத்துக்கள் அல்ல என்றும், அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்தின் தூரரின் கருத்து பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து தூதர் தனது நாடுக்கான பணியை செய்யவில்லை என்றும், கிம் டர்ரோச் குறித்த கருத்துக்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளான உறவு பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version